உலகப் பொதுமறையென்று தமிழ் பேசும் மக்கள் கொண்டாடும் திருக்குறளும் இறைத்தூதர் முகமது நபிகள் பெருமானார் வழியாக உலக மக்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதமான திருக் குர்ஆனும் சந்திக்கும் எண்ணற்ற புள்ளிகள் இருக்கின்றன. அதில் சில தருணங்களை இப்போது பார்ப்போம்:

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர். (திருக்குறள்: 620)

பொருள்: சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்கிறவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச்செய்பவர் ஆவார்கள். (உரை: புலியூர்க் கேசிகன்)

மறுமையின் நன்மைகளை விரும்பி தங்களுடைய அத்தனை முயற்சிகளையும் அதனை நோக்கி செலுத்துகிற நம்பிக்கையாளர்களுடைய முயற்சிகளை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.

(திருக் குர் ஆன்: 17:19)

இதற்கு வியாக்கியானம் தரும் திருக் குர்ஆன் வர்ணனையாளர் அப்துல்லா யூசுஃப் அலி, “வெறும் விருப்பம் மட்டும் போதாது; அதனை அடையக்கூடிய பெரும் முயற்சியும் இருந்தால்தான் இறைவன் அதனை ஏற்றுக்கொள்வான்.” என்கிறார்.

இன்னுமொரு திருக்குறள்:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையா னுழை. (திருக்குறள்: 594)

பொருள்: தளராத ஊக்கம் உடையவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று வழி கேட்டுக்கொண்டு அங்கு சென்று சேர்கிற ஆக்கம் அவர்களிடத்திலேயே நிலையாக தங்கியிருக்கும். (உரை: புலியூர்க் கேசிகன்)

மனம் தளராதீர்கள்;உறுதியில் நிலைகுலையாதீர்கள்; அமைதிக்காக அழ வேண்டாம்; நீங்களே மேலானவர்கள்; இறைவன் உங்களுடன் இருக்கிறான்; உங்களுடைய நற்செயல்களுக்காக அவன் உங்களை நஷ்டத்தில் விட மாட்டான். (திருக் குர் ஆன்: 47:35)

இந்த வசனத்தை விவரிக்கும் அப்துல்லா யூசுஃப் அலி, நன்மை மேலோங்கியே தீரும்; அதற்கு இறைவனே பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளான் என்கிறார்.   

THE RAYA SARKAR INTERVIEW

Dear TCS, Please don’t miss this historic opportunity

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here