திரிபுரா மாநிலம் சாரிலம் தொகுதிக்கான தேர்தலைப் புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்.18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சாரிலம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், ஐபிஎஃப்டி கட்சி எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே வெற்றிபெற்ற 48 மணி நேரத்திற்குள், பாஜகவினர் திரிபுராவின் பெலோனியா நகரிலிருந்த லெனின் சிலையை, பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினர். இதனைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களும் நடந்தன.

இந்த அசாதாரண சூழலையடுத்து, சாரிலம் தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் மாரச்.12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுதம் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்