திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், ஐபிஎஃப்டி (Indigenousn People’s Front Of Tripura) கட்சி எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றது. மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட இம்மாநில சட்டப்பேரவைக்கு ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை. பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையாக இருப்பதால் அக்கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. இதனையடுத்து முதல்வர் மாணிக் சர்க்கார், அம்மாநில ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…