திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 45 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

திரிபுரா, மேகலாயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டவை. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமையும் (பிப்.27), திரிபுரா மாநிலத்தில் கடந்த பிப்.18ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் காலை 11.45 மணி நிலவரப்படி, திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 43 இடங்களிலும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்