மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் காராக்பூரில் அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அம்மாநிலக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : மேற்கு வங்க பாஜக அலுவலகம் மீது தாக்குதல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்