திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கோரி சென்னை, புதுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு தனது ஆதரவு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டும் என்றார். மேலும் அவர், இதில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டினால் மாணவர்களுடைய போராட்டம், மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும் என்றார். மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், அவர்களுடைய வீழ்ச்சியாகத்தான் இது அமைந்திட முடியும் என எச்சரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க அல்ல, தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்றார்.

இதையும் படியுங்கள் : ”திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு பொங்கல் கொண்டாட வேண்டும்”

1 கருத்து

ஒரு பதிலை விடவும்