தமிழ் திரையுலகில் நடந்து வருவது போராட்டமல்ல, சீர்த்திருத்தம் என்கிறார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால். முக்கியமாக டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிரான போர்.

திரையரங்கில் திரைப்படத்திற்கு நடுவில் திரையிடப்படும் விளம்பர வருவாயை டிஜிட்டல் நிறுவனங்களும், திரையரங்குகளும் பங்கு போட்டுக் கொள்கின்றன. தயாரிப்பாளர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. திரைப்படத்தைப் பார்க்க வருவதால்தான் விளம்பரங்களை திரையிடுகிறார்கள். விளம்பரங்களுக்கு ஆதாரம் திரைப்படங்களே. அதனால், தனது திரைப்படத்தின் நடுவில் என்ன விளம்பரம் போட வேண்டும், எவ்வளவு நேரம் போட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை தயாரிப்பாளருக்கே உண்டு. அந்த வருவாய் தயாரிப்பாளருக்கே போய்ச்சேர வேண்டும். தொழில்நுட்பக் கம்பெனிகளுக்கு இதில் எந்த உரிமையுமில்லை. வேண்டுமானால் தயாரிப்பாளரும், திரையரங்குகளும் விளம்பர வருவாயை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியுள்ளார்.

டிஜிட்டல் நிறுவனங்கள் எப்படி தயாரிப்பாளர்களின் வருவாயை கொள்ளையடிக்கின்றன என்பதற்கு இது சின்ன உதாரணம். அரவிந்த்சாமி அதனை பொட்டில் அடித்தது போல் விளக்கி தீர்வும் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ’அமித் ஷா கூறுவது பொய்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்