தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன்

0
78

ஆரண்யகாண்டம் படத்தை எடுத்த தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சின்ன வேடம் ஒன்றில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடித்துள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். தற்போது முக்கிய வேடம் ஒன்றில் மனுஷ்யபுத்திரனை நடிக்க வைத்துள்ளார். ஒருநாள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட சின்ன வேடம்.

சூப்பர் டீலக்ஸ் படத்தை கான் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். படம் குறித்த இன்னொரு தகவல். முதலில் பி.சி.ஸ்ரீராம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். கருத்து வேறுபாட்டால் அவரை நீக்கி பி.எஸ்.வினோத்தை ஒளிப்பதிவாளராக்கினார் குமாரராஜா. இப்போது அவர் வேறு படத்தில் பிஸியாகிவிட்டதால் நீரவ்ஷாவை வைத்து படத்தை எடுத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள் : கிரிமினல் வழக்குகள்: டாப் 10 முதல்வர்கள் யார்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்