திமுக பொருளாளர் துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். துரைமுருகன் ஏற்கனவே கொரோனா தடுப்புமருந்து 2 டோஸ் எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கடந்த சில மாதங்களாக அனல் பறக்க நடந்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவத் தொடங்கியது. பிரச்சாரங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் கூட்டம் கூட்டமாக பங்கேற்ற மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை காற்றில் பறக்கவிட்டனர். மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் சுற்றித் திரிந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க வழி வகுத்தது.

தேர்தல் சமயத்தில் களம் காணும் வேட்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அந்த வகையில், திமுக எம்.பி கனிமொழியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பிபிஇ கிட் அணிந்து வந்து நேற்று முன்தினம் தேர்தலில் வாக்களித்தார். கொரோனா பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்து விட்டதாகவும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி விட்டதாகவும் நேற்று தகவல் வெளியாகின. இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. துரைமுருகன் தன்னை தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோன உறுதியான துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பு செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here