திமுக பொதுக்குழு தேதி மாற்றம்; மாநில மாநாடு ஒத்தி வைப்பு

0
261

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக பொதுக்குழு  தேதி மற்றும் திருச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  நேற்று மாலை (26ந்தேதி) அறிவித்துள்ளது.  இதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.  திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஏற்கனவே  தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது, திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தலைமை தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 07.03.2021 இன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டமும், 14.03.2021 அன்றும்,  திருச்சியில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க மாநில மாநாடும் ஒத்தி வைகப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here