2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:

1. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத் தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்படும்.

2. வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

3. மத்திய அரசின் வரிவருவாயில் 50 சதவீதம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர மாநில செயல்திறன் அடிப்படையில், பாரபட்சம் இல்லாமல் நிதிப் பங்கீடு செய்யப்படும்.

4. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

5. தொழிலாளர்களுக்கான குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ.8000 ஆக நிர்ணயிக்கப்படும்.

6. பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் சரிந்து போன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு நிபுணர்கள் கொண்ட பொருளாதார உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
7. தனி நபர் வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

8. நாள்தோறும் உயரும் பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் வைக்கும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டு வரப்படும்.

9. மானியம் நேரடியாக வங்கியில் செலுத்தும் முறை திரும்ப பெறப்படும். சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

10. மருத்துவக் கல்லூரியில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில்வதற்கு அவசியமான நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

11. மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.

12. 10வது படித்திருக்கும் 1 கோடி பேர் சாலைப் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

13. 10வது படித்த 50 லட்சம் கிராம மக்களுக்கு மக்கள் நலப் பணியாளர்கள் பணி வழங்கப்படும்.

14. கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பப் பெண்கள் சிறு தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

15. மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும்.

16. கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும்.

17. தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

18. சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை அனுப்புபவர்களை தண்டிக்க தனிச் சட்டம் இயற்றப்படும்.

19. தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு முறை அறிமுகம் செய்யப்படும்.

20. நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.

21. ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சார வசதி கொடுக்கப்படும்.

22. குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.

23. மாணவர்களுக்கு ரயில்களிலும் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.

24. கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல குறைக்கப்படும். 25. தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

26. சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

27. தூத்துக்குடியில் குலசேகரப்பட்டினம் அருகே இரண்டாவது ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்படும்.

28. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வேளாண் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த ஸ்டாலின், முக்கிய அம்சங்களை மட்டும் வாசித்துவிட்டு, முழு தேர்தல் அறிக்கையை செய்தியாளர்களுக்கு வழங்கினார்.

29. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here