சென்னை ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி சிகிச்சைப் பலனின்றி மாலை மரணமடைந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் சென்னை ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ராணுவ வாகனத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

பின்னர் அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் உடலடக்கம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்