திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘திமுக தலைவர் கருணாநிதியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய தலைவரை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம் இழந்து தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் ‘‘கருணாநிதியின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும், கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here