திமுக தனிப்பட்ட முறையில் 125 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 19 தொகுதியில் வெற்றி பெறும் என்றும் ஜூனியர் விகடன் வார இதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் களத்தில், மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காகக் களமிறங்கியது தனியார் வார இதழ் . 468 தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்கள் எனப் பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியது.விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இல்லத்தரசிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், திருநங்கைகள் எனப் பல்வேறு தரப்பிலும் சுமார் 50,000 வாக்காளர்களிடம் இந்த மெகா கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் திமுக தனிப்பட்ட முறையில் 125 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?

திமுக : 125

காங்கிரஸ் :19

மதிமுக : 5

சிபிஐ :4

சிபிஎம் :2

விசக : 2

ஐ.யூ.எம். எல்: 2

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி : 1

தமிழர் வாழ்வுரிமைக்கட்சி :1

மனித நேய மக்கள் கட்சி :1

அகில இந்திய பார்வார்டு பிளாக் பேரவை :

மொத்தம் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 163ல் வெற்றி பெறும்

*அதிமுக : 48

பாமக : 2

தா.ம.க: 1

புரட்சி பாரதம் : 1

மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 52ல் வெற்றி பெறும்

*மக்கள் நீதி மய்யம் 1 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்

*தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று 70.89% பேர் தெரிவித்துள்ளனர்.

*தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்று 45% பேர் தெரிவித்துள்ளனர்.

*எடப்பாடி பழனிசாமி அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று 30.11% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

*அடுத்த முதல்வராக டிடிவி வர வேண்டும் என்று 8.96%பேரும், சீமான் 8.7% பேரும் கமல்ஹாசன் 7. 1% பேரும் தெரிவித்துள்ளனர்.

மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?

Courtesy:  vikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here