2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், செய்தியாளர்கள் முன்னிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்களை வெளியிட்டார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன. அதில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 மக்களவைத் தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் விவரங்கள்:
1. திருவள்ளூர்
2. சிவகங்கை
3. தேனி
4. விருதுநகர்
5. கன்னியாகுமரி
6. புதுச்சேரி
7. திருச்சி
8. ஆரணி
9. கரூர்
10. கிருஷ்ணகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here