நீட் மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் முதல்வர் பழனிசாமி தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை எதிர்க்கும் துணிச்சல் மாநில அதிமுக அரசுக்கு உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடக்கிறது. திமுகவில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர், துணை பொதுச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் இந்த முப்பெரும் விழா அதிக கவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 15 – அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 – பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள்.

இந்த மூன்று முக்கியமான நாட்களை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விழா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 7 மாதங்களில் திமுக ஆட்சி என நாடே சொல்கிறது. மக்கள் திமுக ஆட்சி வரும் என்று நம்புகிறார்கள். திமுக ஆட்சிதானா? என ஊடகங்கள் விவாதம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை- மக்கள் மனம் அது.மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் என்பதுதான் அதை தடுக்கும் லட்சணமா?.தமிழக அரசு வெளியிட்ட கொரோனா புள்ளி விவரங்களிலாவது உண்மையா? அதிலும் பொய்கள். கொரோனாவை விட கொடிய ஊழலரசு கோட்டையில் இருக்கிறது- அதை விரட்ட வேண்டாமா?. கொரோனா குறித்து தமிழகம் அடுத்தடுத்து பல பொய்களை சொல்லி வருகிறது. மக்களிடம் அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 15 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம். நீட் மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நீக்கப்படும். மொத்தமாக தமிழகத்தில் 8 மாதத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here