திமுக ஆட்சியில் கொடுத்த டிவி தற்போது நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு தருகிறேன் அமைச்சர் ஜெயக்குமார் சவால்.

சென்னையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்துக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார். இல்லத்தரசிகள் பலர் அவர்களது வீட்டில் அதிமுக கொடுத்த மிக்சி மற்றும் கிரைண்டரை இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருக்கிறது என்று காண்பித்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன் எனவும் சவால் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here