மதிமுகவை திமுகவுடன் இணைக்கப் போவதாகவும், அடுத்தபொதுச் செயலாளர் பதவியை வைகோவுக்கு அளிக்கப் போவதாகவும் வரும் செய்திகள்உண்மையா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “ மத்திய மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்புவதே தற்போது மக்களின் மனநிலையாக உள்ளது. அவர்களை தோற்கடிப்பதில் எங்களை விட மக்களே அதிக ஆர்வமாக உள்ளனர்.

திமுக கூட்டணி மத்திய பாஜக அரசையும், ஊழல் மயமான அதிமுக அரசையும் அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல போராட்டக்களங்களில் இணைந்து நிற்கும் கூட்டணி. ஆனால் அதிமுக கூட்டணி பாஜகவின் மிரட்டலால் உருவான கூட்டணி. எங்களைவிட படுமோசமாக அதிமுகவை விமர்சித்தவர்கள், வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி சேர்ந்திருப்பதை மக்கள் விரும்பமாட்டார்கள்.

திராவிட இயக்கத்தின் போர்க்குரலாக திகழ்பவர் அண்ணன் வைகோ. திராவிடத்திற்கு எதிரான வஞ்சக சக்திகளை வீழ்த்துவதையே தனது லட்சியமாக கொண்டு செயல்படுகிறார். தலைவர் கருணாநிதியிடம் கூறியது போல, திமுகவுக்கும் எனக்கும் தோள் கொடுத்து வருகிறார். மதிமுக தொண்டர்களும் அதே உணர்வுடன் செயல்படுகின்றனர். இதுதான் உண்மை நிலை, மற்றவை உங்கள் யூகங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here