தினம் ஒரு லீக்ஸ்… ஸ்ரீரெட்டியை கண்டு அலறும் தெலுங்கு சினிமா

0
497
Sri Reddy

சுசி லீக்ஸ் சும்மா என்று சொல்லும் அளவுக்கு நடிகை ஸ்ரீரெட்டியின் ஸ்ரீ லீக்ஸ் தினம் ஒரு ஹாட் செய்தியுடன் அனலடிக்கிறது.

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி தனக்கு சங்கத்தில் உறுப்பினர் அட்டை தரவில்லை என்று போர்க்கொடி தூக்கினார். தெலுங்கு சினிமாவை நான்கு குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் விருப்பமில்லாமல் தெலுங்கு சினிமாவில் நுழைய, நிலைக்க முடியாது, அந்த குடும்பங்களின் வாரிசுகளுக்காக மற்றவர்கள் முடக்கப்படுகிறார்கள் என சரமாரியாக குற்றச்சாட்டுகள் வைத்தார். வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது என்று சொல்லி அவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டார். புகைப்பட ஆதாரத்துடன் ஸ்ரீரெட்டி இதனை செய்வதால் தெலுங்கு சினிமா கிலியில் உள்ளது. இதற்கு நடுவில் ஸ்ரீரெட்டி ஆந்திரா ஃபிலிம்சேம்பர் முன்பு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்த, ஸ்ரீ லீக்ஸ் தேசிய அளவில் கவனம் பெற்றது.

சேகர் கம்முலா, அபிராம் இருவரைத் தொடர்ந்து கோனா வெங்கட் மீதும் பாலியல் புகார் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகப்படுத்துகிறேன் என்று அழைத்து கோனா வெங்கட் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்ததாக அவர் கூறியுள்ளார். வழக்கம் போல் இதனை மறுத்திருக்கும் கோனா வெங்கட் போலீசுக்குப் போவதாக பூச்சாண்டி காட்டியுள்ளார்.

ஸ்ரீ லீக்ஸின் லேட்டஸ்ட் பிரபலம் பாடகர் ஸ்ரீராம். ஸ்ரீரெட்டியுடன் போனில் சாட் செய்ததுள்ள இவர் ஸ்ரீரெட்டியின் முன்னழகையும், பின்னழகையும் வர்ணித்துள்ளார். சாட்டில் ஸ்ரீரெட்டியை அடையும் ஆர்வம் தளும்புகிறது. இந்த உரையாடலை ஸ்ரீரெட்டி ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் தாக்குதல் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அவர் சொல்வதைப் பார்த்தால் மொத்த தெலுங்கு படவுலகமும் ‘அப்படி’த்தான் இருக்கும் போலிருக்கிறது.

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்