தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஓட்டுநரைத் தேர்வு செய்யும் பணி நடைபெறவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சென்னை ஐஐடியில்கூட மாணவர்களுக்கு போதுமான மனநல ஆலோசகர்கள் இல்லை

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள் : காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமாவின் நிலை என்னவாகும் ?baskar

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் தற்போது 75 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், செவ்வாய்க்கிழமை முதல் 100 சதவிகித பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஊழியர்களைத் தேர்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஓட்டுநர் உரிமம், கனரக ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் வைத்திருப்போர் அருகில் உள்ள போக்குவரத்து பணி மனை மேலாளரை அணுகலாம் என்றும், பிற்காலத்தில் அரசு பணியில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்