தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு செய்தி தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா என தெரியவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
பல நேரங்களில் தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவினரை சந்திக்க வேண்டும் என தூது விட்டிருக்கிறார்கள். “தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு செய்தி
தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா என தெரியவில்லை.யார், யார் எப்போது, எதற்காக சந்தித்தார்கள் என்பது இப்போது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவர்களின் பரஸ்பர குற்றச்சாட்டு எந்தவிதத்திலும் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் சில குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆளுநர் வந்த பிறகு 9 துணை வேந்தர்கள் நேரடியாக தகுதியின் அடிப்படையில் நியமிக்கமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இதுதான் முதல்படி. படிக்கின்ற மாணவர்களுக்கு நேர்மையான துணை வேந்தர்கள் வர வேண்டும். இதற்கு முன்னால் எப்படிபட்டவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணைக்குட்படுத்த வேண்டும். பரபரப்பான அரசியல் சூழல்நிலை தமிழகத்தில் நிகழ்ந்தாலும் முதல்வர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தில்லி செல்வது வரவேற்கதக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்