ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனை, கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு சந்தித்தார். சென்னை அடையாறிலுள்ள டிடிவி தினகரன் வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரிலிருந்து யாராவது ஒருவர் முதல்வராக வர வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், மக்கள் ஆதரவு உள்ளதால் டிடிவி தினகரனைச் சந்தித்து ஆதரவு அளித்ததாகவும், சுய விருப்பத்தின் அடிப்படையில் தினகரனுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ttv

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளநிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்