தாராவியில் இன்று (ஜூலை 28) வெறும் 3 பேருக்கு மட்டுமே கொரோனா

0
120

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெறும் 3 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,543ஆக உயர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஹாட்ஸ்பாட்டாக இருந்த தாராவியில், கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவகிறது.

கடந்த ஜூலை 7-இல் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்றைய தினம் வரை இதுவே குறைந்தபட்ச பதிவு. ஜூலை 4 மற்றும் ஜூலை 26-இல் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ஜூலை 8 ஆம் தேதி 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் பிறகு, இன்று மீண்டும் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், “இதுவரை மொத்தம் 2,204 பேர் குணமடைந்துள்ளதால், இன்றைய தேதியில் வெறும் 88 பேர் மட்டுமே சிகிச்சைபெற்று வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here