TOPSHOT-THAILAND-ACCIDENT-WEATHER

தாய்லாந்து குகை ஒன்றில் சமீபத்தில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
முன்னதாக, காணாமல் போன சிறுவர்கள் குறித்த செய்திகள் நாட்டில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப்பெரியளவில் முன் வந்தனர்.

river

சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

THAILAND-ACCIDENT-WEATHER

ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே அச் சிறுவர்கள் காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு மீட்புப் பணிக் குழுவினர் உணவும் மருந்தும் கொண்டு சென்றனர். உயரும் நீர் மட்டத்தின் காரணமாக இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு சப்ளை செய்யப்படும் என்று ராணுவம் கூறியுள்ளது.

அதிகரித்து வரும் நீரின் அளவு மற்றும் சேற்றின் ஆழம் காரணமாக தேடுதல் பணி தாமதமடைந்தது.

11-16 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவர்கள் அங்குள்ள தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க ஜூன் 23 அன்று உள்ளே சென்றிருக்கின்றனர்.
இந்தச் சிறுவர்களை அவர்களுடன் சென்ற 25 வயது துணை பயிற்சியாளர் இரண்டு வருடத்திற்கு முன்பும் தற்போது சிக்கி இருக்கும் குகைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

இந்த 12 சிறுவர்களும் மூ-பா அல்லது காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்தவர்கள். அந்த குழுவின் தலைமை பயிற்சியாளர்
கூறுகையில் எதிர்காலத்தில் தொழில்முறை கால்பந்து வீரர்களாக வேண்டும் என்று விரும்பியதாகவும், அந்த சிறுவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

st_20180703_cave_r2_4106309-page-001

“தற்போபோது நாங்கள் அவர்கள் சிக்கி இருக்கும் இடத்தினைக் கண்டறிந்திருக்கிறோம். சிறுவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே உள்ளனர். எங்களது பணி, சிறுவர்களை தேடுவது, மீட்பது மற்றும் அழைத்து வருவது. ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை, அடுத்த பணி அவர்களை குகையில் இருந்து வெளியே கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புவது என்றும் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வரை அவர்களை கண்காணிப்போம்” என்றும் சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குகையில் இருக்கும் நீரை வற்ற வைத்து பின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் உள்ளே இருக்கும் சிறுவர்களின் உடல் நலத்தை சோதனை செய்யப்போவதாகவும் சிறுவர்களின் உடல் நலம் அவர்களை வெளியே கொண்டு வரும் அளவிற்கு வலிமையாக இருந்தால் குகையிலிருந்து வெளியே அழைத்து வரப்படுவார்கள் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here