தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு தகுதி

Thailand Open: Saina Nehwal won her 1st round match against Malaysia's Kisona Selvaduray, but HS Prannoy was knocked out by Lee Zii Jia.

0
158

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

கொரோனா பாசிட்டிவ் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அதன்பிறகு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வர விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் சாய்னா நோவல் மலோசியாவின் செல்வதுரை கிசோனாவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-15, 21-15 என எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் சவுரப் வர்மாவை 21-12, 21-11 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

காஷ்யப் 3-வது சுற்றில் 8-14 என பின்தங்கிய நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கனடா வீரர் ஜேசன் அந்தோணி ஹோ-ஷுயே 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

காஷ்யப் முதல் சுற்றை 9-21 எனஇழந்திருந்தார். அதன்பின் 2-வது சுற்றை 21-13 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் இருந்து வெளியேறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here