பெற்றத் தாயே மறுத்துவிட்ட நிலையில், தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமளித்துள்ளார் 60 வயது மாமியார்.
பார்மெர் பகுதி காந்தி நகரில் வசித்து வருபவர் கனி தேவி (60). இவர் தனது 32 வயது மருமகள் சோனிகாவுக்கு ஒரு சிறுநீரகத்தை தானமளித்துள்ளார்.
சோனிகாவின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில், கடந்த ஓராண்டாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தில்லி மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் சோனிகாவின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.
உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. சோனிகாவின் தாய், தந்தை, சகோதரன் என யாருமே தங்களது சிறுநீரகத்தை தானம் அளிக்க முன் வராத நிலையில், அவரது மாமியார் கனி தேவி சிறுநீரகத்தை தானம் அளித்தார்.
செப்டம்பர் 13ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்று சோனிகா தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். தனக்கு மறுவாழ்வு அளித்த மாமியாருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக சோனிகா கூறியுள்ளார்.
 

courtesy:dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here