தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ரத்து

0
251

தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், காற்று சத்தமில்லாமல் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வடசென்னை, வில்லிவாக்கம், தி.நகர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, 1913, 04425619206, 04425619207, 04425619208, வாட்ஸ்அப் – 9445477205 ஆகிய எண்களில் மக்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் விடி விடிய பெய்து கனமழை பெய்து வருவதால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வரும் மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here