கடந்த செப்டம்பர் மாதம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரிட்டன் டூரிஸ்ட் நிறுவனமான தாமஸ் குக் நிறுவனம் நஷ்டத்தால் அதள பாதாளத்தில் வீழ்ந்தது. சுமார் 22 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வேலை பறிபோனது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

காரணம், பிரிட்டன் அல்லது ஐரோப்பிய சுற்றுலா என்றால் சர்வதேச சுற்றுலாப் பிரியர்களின் முதல் தேர்வாக தாமஸ் குக் நிறுவனம் இருக்கும். இந்நிலையில், பல காலமாக தாமஸ் குக் நிறுவன பங்குதாரர்களுள் ஒன்றாக இருந்த ஃபோசன் நிறுவனம் தாமஸ் குக்-ஐ வாங்கியுள்ளது.

பழமைவாய்ந்த வரலாறு கொண்ட தாமஸ் குக் நிறுவனம் திவாலாகிப் போனதால் அந்நிறுவனத்தை மீட்க சுமார் 14.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்தி ஃபோசன் வாங்கியுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here