தாமரை தமிழ் பாடல் வரிகளின் தேவதை….

0
2326

தமிழ் திரைப்பட பாடல்களில் ஒரு பெண்ணின் காதல், தாய்மை, கனவு, ஆசை, என எல்லா உணர்வுகளையும் ஆண்கவிஞர்கள் அவர்களது நிலையிலிருந்து, ஒரு பெண் எப்படி வெளிப்படுத்துவாள் என்பதையே தங்களது பாடல்களில், ஒரு பெண்ணின் எண்ணமாக திணித்து வந்தார்கள். அத்தகைய பாடல்களைதான் பெண்களும் கொண்டாடி வந்தோம். அவ்வார்தைகளின் போலி தன்மைகள், வாலியாக இருந்தாலும் சரி, வைரமுத்துவாக இருந்தாலும் சரி எட்டி பார்க்க தவறியதே இல்லை.

அதற்கெல்லாம் முற்றுபுள்ளியாய் தமிழ் பாடல்களில், ஒரு பெண் காதலை எப்படி உணர்வாள், தாயாக அவளது எண்ணங்கள் எப்படி இருக்கும், கனவுகளை நோக்கிய அவளது சிறகுகள் எப்படி பயணிக்கும் என்பதை தமிழ் திரைப்பட பாடல்களில் பிரதிப்பலித்தவர் கவிஞர் தாமரை.

கண்கள் நீயே… காற்று நீயே… இசையாக பல, பல ஒசை செய்திடும் ராவணன்…ஈடில்லா என் மகன் என்ற முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் தாமரையின் வரிகள், தாய்மையின் உச்ச அன்பை வெளிப்படுத்தின.

1424468573_hqdefault

இனியவளே தொடங்கி மின்னலே, அச்சம் என்பது மடமையடா வரை அவரது பாடல் வரிகளின் மீதான அவரது ரசனை அதிகரித்து கொண்டேதான் உள்ளது.

victor_love123[7]

பாடல் ஆசிரியராக மட்டுமில்லாமல் தமிழ் ஈழப் போராட்டம், தமிழ்பாடல்களில் இரட்டை அர்த்த வார்தைகளுக்கு எதிரான தாமரையின் குரல், தமிழ் சினிமாவின் பாடல் வரிகளின் தேவதையாக தாமரையை நாற்காலி போட்டு அமரவைத்துள்ளது.

lyricist_thamarai_photos_0056

அச்சம் என்பது மடமையடா படத்தில் தாமரையின் வரிகள்:

ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே…..
கண்ணெல்லாம் நீயேதான்
நிற்கின்றாய்….
விழியின் மேல் நான் கோபம்
கொண்டேன்….
இமை மூடிடு என்றேன்….
நகரும் நொடிகள்…..
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே…
வரிவரிக் கவிதை
…………..
தள்ளிப் போகாதே….
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே….
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்