தாப்ஸியின் படத்தைப் போல் எதையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது

0
248

தாப்ஸி நடித்துள்ள கேம் ஓவர் படத்துக்கு கொடுத்திருக்கும் கேப்ஷன் அனைவரையும் கவர்ந்துள்ளது. ‘நீங்கள் இதைப்போல் எதையும் பார்த்திருக்க முடியாது…’ இதுதான் அந்த கேப்ஷன்.

நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனின் இரண்டாவது படம் கேம் ஓவர். தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் தாப்ஸி பரிட்சயமான நடிகை என்பதால் கேம் ஓவர் படத்தை இம்மூன்று மொழிகளிலும் வெளியிடுகின்றனர். ஜுன் 14 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

ஹாரர் படமான இதனை பார்த்த சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் தரத்துக்கு சான்றாக ஒரு விஷயம் நடந்துள்ளது. கேம் ஓவரின் இந்திப் பதிப்பை அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார். எனில் படம் தரமாகவே இருக்கும்.

கேம் ஓவரில் முழுக்க வீல் சேரில் அமர்ந்திருக்கும் கதாபாத்திரத்தில் தாப்ஸி நடித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here