தாப்ஸி நடிக்கும் நாயகி மையப் படமான கேம் ஓவரின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

தமிழ், தெலுங்கில் நாயகனை காதலிக்கும் சாதாரண நாயகியாக பார்க்கப்படும் தாப்ஸி இந்தியில் இன்னொரு பரிமாணம் அடைந்துள்ளார். அவர் நடித்த பிங்க் போன்ற படங்கள் அவருக்கு தனி மரியாதையை ஏற்படுத்தி தந்தன. அனுராக் காஷ்யபின் கடைசிப் படத்தில் தாப்ஸி நாயகியாக நடித்திருந்தார். வரவிருக்கும் தட்கா இந்திப் படத்தில் தாப்ஸியே நாயகி. மலையாளம் சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் இந்தி ரீமேக் இது. பிரகாஷ்ராஜ் இயக்குகிறார். அதேபோல் ஸ்பானிஷ் படமான, தி இன்விசிபிள் கெஸ்ட் இந்தியில் பத்லா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கஹhனி படத்தை இயக்கிய சுஜாய் கோஷ் இதனை இயக்குகிறார். அதிலும் தாப்ஸியே நாயகி.

இந்திப் படங்களில் கலக்கும் தாப்ஸியின் தாக்கம் தென்னிந்தியாவிலும் தெரியத் தொடங்கியிருக்கிறது. தாப்ஸியை மையமாக வைத்து கேம் ஓவர் என்ற படத்தை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கியவர். தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இறவாக்காலம் படத்தை இயக்கி வருகிறார். தேனாண்டாள் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

தாப்ஸி நாயகியாகும் கேம் ஓவர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் படத்தை ஒரேநேரத்தில் எடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்