தவறில் இருந்து கற்றுக் கொள்வோம் : சமந்தா

0
122

நடிகை சமந்தா, தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா, மாமனாருடன் தோட்டக் கலை செய்வது, அழகு குறிப்பு என பல வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு, மீண்டும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது ‘இன்ஸ்டாகிராம்’ பதிவில், ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் என்பதை நாம் பலமுறை கேட்கிறோம். ஆனால், ஆரோக்கியமாக வளருங்கள் என்பது இன்னும் எளிமையானது என்பேன். சிறிய முயற்சி இருந்தால் போதும். வீட்டின் மொட்டைமாடி, பால்கனி, ஜன்னல் போன்ற எந்த இடத்தையும் தோட்டமாக மாற்றலாம். அடுத்த சில வாரத்தில், நம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தவறில் இருந்து கற்றுக் கொள்வோம். இன்னொரு ஊரடங்கு வந்தால், கடை வீதிக்கு சென்று, பீதியை வாங்கி வராமல் இருப்போம், என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here