தவறான பாதையில் ஓ.பி.எஸ் சென்று கொண்டிருப்பது கவலை அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். சென்னையில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ். கலந்து கொள்வார் என நம்பிக்கை இருக்கிறது.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். திட்டமிட்டபடி நாளை அதிமுக பொதுக்குழு நடக்கும் என உறுதிபட தெரிவித்தார்.

ஓ.பி.எஸ். தவறுமேல் தவறு செய்து வருகிறார்:

அதிமுகவில் அராஜகப்போக்கு நிலவுகிறதா? என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருவதாக கடும் விமர்சனம் செய்துள்ளார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது என்ற எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயக்குமார் விமர்சித்தார்.

ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும். தவறான பாதையில் ஓ.பன்னீர்செல்வம் பயணித்து  கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் மதிப்பு அளிக்க வேண்டும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here