ரஜினியின் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து மீடியாவில் வேகமாக ஒரு செய்தி பரவியது. பேட்ட வரும் பொங்கலுக்கு வெளியாவதால், பொங்கலுக்கு வருவதாக இருந்த விஸ்வாசம் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். இதற்கு விஸ்வாசம் தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சென்ற வருட இறுதியில் விஸ்வாசம் படம் குறித்த அறிவிப்பு வந்தபோது, 2018 தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றனர். ஸ்கிரிப்ட் எழுதும் பணி தாமதமானது, திரையுலக வேலை நிறுத்தம் ஆகிய காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போக, விஸ்வாசம் 2019 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். அதில் இப்போதுவரை மாற்றமில்லை.

இந்நிலையில் பேட்ட படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து, பேட்ட 2019 பொங்கலுக்கு வெளியாகும், பேட்ட வருவதால் விஸ்வாசம் தள்ளிப்போகும் என பேசவும், எழுதவும் செய்தனர்.

இதனை விஸ்வாசத்தின் தயாரிப்பாளர் தரப்பு மறுத்துள்ளது. அறிவித்தபடி பொங்கலுக்கு விஸ்வாசம் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here