முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பேட்டயை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாராவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில் சந்தோஷ் சிவனை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளனர்.

இதற்குமுன் மணிரத்னத்தின் தளபதி படத்தில் சந்தோஷ் சிவனும், ரஜினியும் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் இணைகிறார்கள். இதுபற்றி சந்தோஷ் சிவன் தனது ட்விட்டரில், ‘தளபதிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.

முருகதாஸ் இதுவரை இயக்கியதில் தொழில்நுட்பரீதியில் சிறந்த திரைப்படம் துப்பாக்கி. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் அதற்கு முக்கிய காரணம். அடுத்து ஸ்பைடர் படத்துக்கும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்தார். ரஜினி படம் அவர் ஒளிப்பதிவு செய்யும் மூன்றாவது முருகதாஸ் படம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்