தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவர்கள் கூட்டு வன்புணர்வு: பீகார் மாணவி குற்றச்சாட்டு

0
327

கடந்த ஏழு மாதங்களில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவர்கள் ஆகிய 18 பேர் தன்னை வன்புணர்வு செய்ததாக பீகார் மாநிலத்தின் சப்ரா நகரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி குற்றம்சாட்டியுள்ளார்.

முதல் தகவலறிக்கையின் படி சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலில் பள்ளிக் கழிவறையில் மூன்று மாணவர்கள் அச்சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்பவத்தை படம்பிடித்து, இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் காணொளியை வெளியிடுவோம் என அச்சிறுமியை மிரட்டியுள்ளனர்.

சென்ற ஆண்டு, தனது தந்தை சிறைக்கு சென்றது முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தன்னை மிரட்டி கூட்டு வன்புணர்வு செய்து
வந்ததாக காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார் அச்சிறுமி. முதலில், டிசம்பர் மாதம் தன்னுடன் படித்த மாணவன் ஒருவன் தன்னை வன்புணர்வு செய்து மிரட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தபோது, ​​அவரும் மற்ற இரண்டு ஆசிரியர்களும் தன்னை வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார் . அதனை தொடர்ந்து வந்த நாட்கள் மற்றும் வாரங்களில் பிற மாணவர்கள் தன்னை வன்புணர்வு செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார் அச்சிறுமி.

அச்சுறுத்தல் தொடர்ந்ததாகவும், வன்புணர்வு செய்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளார். மேலும், விசாரனை நடத்த மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் , மற்றும் 2 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here