தலைமுடி வளர்ச்சியை தூண்டும் ஆலிவ்

0
881

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது கூந்தல் உதிர்வு ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்க்கலாம்.

சமீப காலமாக ஆண் மற்றும் பெண் என இருபாலருக்குமே உண்டாகும் உடல் உபாதைகளுள் முடி உதிர்வு தான் தலையாய பிரச்னையாக உள்ளது.  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், கூந்தல் பராமரிப்பும் சரியாக இல்லாதபோது முடி உதிர்வு, நுனி பிளவு, வறட்சி போன்ற தலைமுடி பிரச்னைகள் உருவாகும்.  தலைமுடி பிரச்னைகளை போக்க ஆலிவ் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும்.  ஆலிவ் எண்ணெயை கொண்டு கூந்தல் வளர்ச்சியை எப்படி போக்குவதென்று பார்ப்போம். 

ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை:

முட்டையில் மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்கு கலந்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.  இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி கூந்தலை உறுதியாக வளர செய்யும். 

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்:

கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்தியை பொருத்து ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள்.  அதில் பாதி பங்கு தேங்காய் எண்ணெயை எடுத்து இரண்டையும் கலந்து கொள்ளவும்.  பின் இந்த கலவையை சூடு செய்து மயிர்கால்கள் முதல் நுனி வரை தடவி மசாஜ் செய்யவும்.  இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.  இரவில் கூந்தலுக்கு இந்த எண்ணெய் தேய்த்து காலையில் கூந்தலை அலசி விடலாம்.

பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணெய்:

பூண்டில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மை இருப்பதால் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துகிறது.  பூண்டை அரைத்து ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து வரலாம்.  அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசி விடவும்.  வாரத்தில் இரண்டு முறை இதுபோன்று செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 

மேலும் சில குறிப்புகள்:

· தலைமுடிக்கு அவ்வப்போது எண்ணெய் தேய்த்து வந்தால் கூந்தல் உறுதியாகவும் செழித்தும் வளரும்.

· தலைக்கு குளித்த பின் கூந்தலை உலர்த்த ஹீட்டர் பயன்படுத்த கூடாது.

· மார்கெட்டில் கிடைக்கும் ஹேர் கேர் பொருட்களை அதிகளவு பயன்படுத்த கூடாது.

· சருமத்திற்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதேபோல கூந்தலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பதால் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

· மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது கூந்தல் உதிர்வு ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்க்கலாம்.

· ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

·         ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்த தவர வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here