தலைநிமிர்ந்து வருகிறேன்; வாழ்த்துக்கள் என சொல்வீர்களா தலைவரே – ஸ்டாலின் உருக்கம்

0
246

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் கவிதை நடையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

அந்த வீடியோவில் ” திருவாரூரில் கருவாகி, தமிழகத்தையே தனது ஊராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவரே.. முதல்வர்களுக்கெல்லாம் முதல்வரே.. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே இன்று நீங்கள் பிறந்த தினம் ஜூன் 3.. இந்த ஜூன் 3 நான் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலை நிமிர்ந்து வருகிறேன்.

தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றி காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன்.. நீங்கள் மறையவில்லை.. மறைந்திருந்து என்னை கவனிப்பதாக தான் எப்போதும் நினைப்பேன்.. கோட்டையை கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறோம்.. உங்கள் வார்ப்பான நான் இந்த ஜூன் 3 உங்களை வெற்றி செய்தியோடு சந்திக்க வருகிறேன்.. வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே..” என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here