தலித் மற்றும் ஹரிஜன் என்ற வார்த்தைகளை அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளுக்கு பயன்படுத்த தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் (Scheduled Castes and Scheduled Tribes) பிரிவு ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.என்.விஜயகுமார் உத்தரவின்பேரில், தலித் மற்றும் ஹரிஜன் என்ற வார்த்தையை அரசு அலுவலக் குறிப்புகளில் பயன்படுத்தத் தடை விதித்து அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வார்த்தைகளால் சமூக புறக்கணிப்பு மட்டுமே ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்