“தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் மோடி வேடிக்கைப் பார்த்தார்” – ராகுல்காந்தி

1
1642

தலித் மக்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை நடந்த போதும், த்லித் மக்கள் தாக்கப்பட்ட போதும் அதுகுறித்து கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து மவுனமாக இருந்தார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு
எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா
தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி, அமித் சா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி நாடு முழுவதும் தலித்துகள் உயர் சாதியினராலும், பாஜகவினராலும் தாக்கப்பட்டபோது, மோடி மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டித்து எதுவுமே பேசவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சமூகத்தில் கடைசி நிலையில் இருக்கும் பிரிவினரை புறக்கணித்துவிட்ட மோடி, வசதி படைத்தவர்களுக்கும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதரவாக நடந்து கொள்கிறார். தாதா சாஹேப் அம்பேத்கர் குறித்து பெருமையாகப் பேசும் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை என்று கூறினார். .

மேலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் , மஹாராஷ்டிரம் , மாநிலங்களில் பாஜகவினரும், இந்து அமைப்புகளினால், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய போது , மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறினார். .

மத்திய அரசு தலித்துகள், பழங்குடியினருக்கு ஒதுக்கிய பணத்தில் இந்தியாவிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மட்டுமே,
தலித் மக்களுக்காக செலவு செய்து இருக்கிறது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பொழுது மத்திய அரசுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணத்தைஏழை மக்களுக்காகச் செலவிடாமல், மோடி குறிப்பிட்ட 10 தொழில் அதிபர்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார். காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார்.

கர்நாடகாவில் பிடார் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரச்சாரம் செய்த மல்லிகார்ஜூன் கார்கே பிரதமர் மோடியின் முதலைக் கண்ணீர் தலித் மக்களுக்கும், தனக்கும் வேண்டாம் என்று கூறினார்.

மக்களவையில் என்னை எதிர்க்கட்சி தலைவராகாமல் தடுத்தது பாஜகதான் என்றும் அரசியலமைப்பு சட்டப்படி என்னைத்தான் அவர்கள் எதிர்கட்சி தலைவராக்கி இருக்க வேண்டும், ஆனால் அதைத் தடுத்தது பாஜக. இப்போது என் தொகுதிக்கு வந்து என்னிடமும், தலித் மக்களிடமும் பொய்யான அன்பைக் கொட்டுகிறார். தலித்துகள் மீது பொய்யான அன்பைக் காட்டிவிட்டு கடைசியில் ஆர் எஸ் எஸ்ஸை கல்யாணம் பண்ணிப்பார் என்று தலித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here