உடுமலைப்பேட்டையில் காதல் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடுமலைப்பேட்டையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர் என்பவர், கவுசல்யா என்ற வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சங்கர் மற்றும் கவுசல்யா மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சங்கர் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படியுங்கள் : மூன்று வருடங்களில் 81 ‘கௌரவ’ கொலைகள்!

இந்த வழக்கு தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நிதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் சில குற்றவாளிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலை திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பழனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த மற்ற குற்றவாளிகளையும் பிடித்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிபட்டவர்களிடமிருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவ்க்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஜாதியைக் கொண்டாடும், ஜாதியைக் கலாய்க்கும் ட்விட்டர்வாசிகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்