தலித் இளைஞரைக் காதலித்ததற்காக, திருமணத்தன்று மகளை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம், அரிக்கோடு அருகே பூவதி கண்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஆதிரா. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிரிஜேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். பிரிஜேஷ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலை ஆதிராவின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் ஆதிரா, தனது தந்தைக்குத் தெரியாமல் காதலர் பிரிஜேஷுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அதிராவின் தந்தை ராஜன், பிரிஜேஷூடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, ஆதிரா மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து வெள்ளிக்கிழமை (இன்று) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ராஜன், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருடன் திருமணம் வேண்டாம் என தனது மகளுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை ஆதிரா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதிராவின் தந்தை ராஜனைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார், ஆதிராவைத் துரத்திக்கொண்டு அவரது தந்தை ராஜன் ஓடியதாவும், உயிருக்குப் பயந்து ஓடிய ஆதிரா, அருகிலுள்ள வீட்டின் சமையலறையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அப்போது ஆதிராவின் நெஞ்சில் அவர் கத்தியால் குத்தியதாகவும், அதனால் ஆதிரா உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நன்றி: The NewsMinute

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here