ஹாஜிகள் தலாக் சான்றிதழ் வழங்குவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வக்பு வாரியத் தலைவருமான பதர் சயீத், தலாக் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை புதன்கிழமையன்று, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதும் தலாக் சான்றிதழ் வழங்க ஹாஜிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஹாஜிகள் வழங்கும் தலாக் உத்தரவுகளுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது என்றும், தலாக் மீதான இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நீதிமன்றகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை பிப்.21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: முத்தலாக் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை: அ.மார்க்ஸ்

இதையும் படியுங்கள்: முத்தலாக்கைப் பற்றி நீங்கள் அவசியம் அறிய வேண்டிய பின்னணி விஷயங்கள்: அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்