தற்போது இருக்கும் பெரும்பான்மைவாதம் இந்தியாவை இருண்ட, நிச்சயமற்ற பாதைக்கு இட்டுச்செல்கிறது – மோடி அரசை விளாசும் ரகுராம் ராஜன்

0
1010

முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவரான ரகுராம் ராஜன் தற்போது இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலைமை கவலைக்குரியது என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் தற்போது இருக்கும் பெரும்பான்மைவாதம் இந்தியாவை இருண்ட நிச்சயமற்ற  பாதைக்கு வழிநடத்தி செல்கிறது  என்றும்  கூறியுள்ளார். 

தற்போது இந்தியாவில் இருக்கும் பொருளாதார வீழ்ச்சி தவறாக நடைமுறைபடுத்தப்பட்ட பணமதிப்பிழப்பினாலும், மோசமாக செயல்படுத்தபட்ட ஜிஎஸ்டி யாலும் உருவாக்கப்பட்டதே என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

அக்டோபர் 9 ஆம் தேதி பிரவுண் பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது மோடி அரசை விமர்சித்து பேசியுள்ளார்.   

தற்போது ஆளும் அரசுக்கு பொருளாதரம் குறித்த சரியான கண்ணோட்டம் இல்லாததால் பொருளாதாரத்தில் இந்தியா சரிவைச் சந்திக்கிறது. 

பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும் இந்திய அரசு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது அதனால் அரசியல் லாபம் கிடைக்கும் என்று ரகுராம் ராஜன் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி கூறுகிறது . 

மோடி அரசு பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறது என்று முன்பு கூறியிருந்தார் ரகுராம் ராஜன் . மீண்டும் அந்தக் கூற்றை உறுதி படுத்தும் வகையில் ரகுராம் ராஜன் பேசியதாவது – பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க  மோடி அரசிடம் எந்த ஒரு பன்னோக்கு பார்வையும் இல்லை என்றார்.  

 பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்வது குறித்தும்  அவர்கள் வீட்டிற்கு வருமான வரித்துறையை, அமலாக்கத்துறையை அனுப்புவது குறித்தும் ரகுராம்  ராஜனிடம் கேட்ட போது எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தால் அவ்வாறு நிகழாது என்றும் அவர்களுடன் ஒத்து போகாத எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள் என்றும் கூறினார். மேலும் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தை எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் வைத்திருப்பது கவலையளிக்கிறது என்று கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது . 

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here