சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ரஜினி போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்று வைரலாகின.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பேசிய  இசையமைப்பாளர் அனிரூத், ‘தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தர்பார் படப்பிடிப்புக்கு பிறகு இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அனிரூத் தெரிவித்துள்ளார்