தருமபுரியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை, இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதற்கு அரசியல் சாசன சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டதாக தமிழக ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆயினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவையில் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆய்வு, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், தஞ்சையில் நடைபெற்றது.

இந்நிலையில் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஒட்டப்பட்டி பகுதியில், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: நீங்கள் யாரையாவது சார்ந்து இருப்பவரா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்