17-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, வேட்பு மனு பரிசீலினை முடிந்து நாளை வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டவர்களின் முழு விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அசையும் மற்றும் அசையா சொத்து விரவங்களையும் பதிவு செய்துள்ளார். 

தயாதி மாறன் யார்?: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன். இவர் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். அதற்கு கைமாறாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் தொலைக்காட்சி குழுமத்திற்கு ரூ.743 கோடி மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக பெற்று தந்தார் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

பின்னர், சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் பதில் சொல்லாததைக் காரணம் காட்டி வழக்கிலிருந்து விடுக்கப்பட்ட தயாநிதி மாறன், அமைச்சராக இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் 323 தொலைபேசி இணைப்புகளை தனது குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சி குழுமத்திற்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும், அதன்மூலம் சுமார் ரூ.400 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என சிபிஐ தொடர்ந்த வழக்கு இன்றளவும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், தற்போது மத்திய சென்னையில் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தயாநிதிமாறன், வேட்பு மனு தாக்கலின் போது தனக்கு ரூ.11 கோடியே 66 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், வெறும் ரூ.59 ஆயிரம் மட்டுமே அசையா சொத்து இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

சொத்து மத்திப்பு உயர்ந்ததா குறந்ததா?: 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தாக்கல் செய்திருந்த மனுவில், தன்னிடம் ஒரேயொரு கார் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அசையும் சொத்துக்கள் தயாநிதி மாறனிடம் ரூ. 6 லட்சத்து 13 ஆயிரத்து 454 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளன. வங்கிகளில் வைப்புத் தொகை, சேமிப்பு தொகை, பங்குபத்திர முதலீடு, பங்கு முதலீடு, நிறுவன முதலீடு, எல்.ஐ.சி., அஞ்சலக காப்பீட்டுத் தொகை, அறக்கட்டளைகளில் முதலீடுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வட்டி என்று அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரத்து 410 ஆகும். 

தயாநிதிமாறனின் மனைவி பிரியாவிடம் 1745 கிராம் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் இதர நகைகள் என்று ரூ.1 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தயாநிதிமாறனின் மகள் திவ்யா பெயரில் ரூ.3 கோடியே 53 லட்சத்து 26 ஆயிரத்து 991 மதிப்புள்ள சொத்துக்களும், மகன் கரண் பெயரில் ரூ. 3 கோடியே 5 லட்சத்து 44 ஆயிரத்து 794 மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன. 

அசையா சொத்துக்கள் தயாநிதிமாறனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 10 கோடியே 94 லட்சத்து 29 ஆயிரத்து 157 ஆகும். அவரிடம் அசையா சொத்துக்களே இல்லை என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் ரூ.1 கோடியே 66 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ. 3 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு தன் பெயரிலும், 3 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு தனது மனைவி பெயரிலும், 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு தன் மகன் பெயரிலும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திருக்குவளையில் உள்ள 59 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள நிலமே தனது அசையா சொத்து என தெரிவித்துள்ளார். 

Courtesy: dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here