கடந்த சில நாட்களாக மிக மனவேதனையில் இருப்பதாக மறைந்த நீதிபதி லோயாவின் மகன் அனுஜ் லோயா கூறியுள்ளார்.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. இதனிடையே சொராபுதீன் சேக் என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளார்களைச் சந்தித்த மறைந்த நீதிபதி லோயாவின் மகன் அனுஜ் லோயா, கடந்த சில நாட்களாக மிக மனவேதனையில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர், தயவு செய்து தங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவரது வழக்கறிஞர் அமித் நாயக், நீதிபதி லோயாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், இது ஒரு சோக நிகழ்வு என்றும் தெரிவித்தார். இதனை அரசியலாக்கி தங்களைக் காயப்படுத்த வேண்டாம் என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்