தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க கோரிக்கை

0
132

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(கில்டு) சார்பில் பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

அதில், ‘தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சில நாட்களிலேயே தங்களது இணையதளத்தில் திருட்டுதனமாக வெளியிடுகிறது. இதன் காரணமாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here