ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் அக்‌ஷய்குமார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர்.

இவர் தற்போது தமிழ் படங்களின் இந்தி ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வசூல் குவித்த காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தை லாரன்ஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

அடுத்து 2014ல் சிவா இயக்கத்தில் அஜித்குமார் மற்றும் தமன்னா ஜோடியாக நடித்து  திரைக்கு வந்தது ‘வீரம்’. இப் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்து அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்.

இந்த நிலையில் 2014-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற விஜய்யின்  ‘கத்தி’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் அக்‌ஷய்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய் 2 வேடங்களில் நடித்து இருந்தார். கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அக்‌ஷய்குமாருடன், சமந்தா நடித்த வேடத்தில் முன்னணி இந்தி நடிகை நடிப்பார் என்று தெரிகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.